Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் கலெக்டர் தகவல் வேலூர் மாவட்டத்தில் நாளை மறுதினம்

வேலூர், ஜன.8: வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் நாளை மறுதினம் 10ம் தேதி 2வது சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடக்க உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது விநியோகத்திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் இம்முகாமில் அலுவலர்களிடம் தெரிவித்து தீர்வு காணலாம். அதாவது, வேலூர் தாலுகாவில் அடுக்கம்பாறையிலும், அணைக்கட்டு தாலுகாவில் கம்மாரபாளையம், காட்பாடி தாலுகாவில் சிவானூர், குடியாத்தம் தாலுகாவில் மேல்ஆலத்தூர், கே.வி.குப்பம் தாலுகா திருமணி, பேர்ணாம்பட்டு தாலுகா மாச்சம்பட்டு ஆகிய கிராமங்களில் நடக்கிறது. எனவே, சிறப்பு குறைதீர்வு முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் ஒளி நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.