Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காட்டு பன்றி இறைச்சியை வெட்டிய தந்தை, 2 மகன்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில்

பேரணாம்பட்டு‍, ஏப்.7: பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில் கிடைத்த காட்டு பன்றி இறைச்சியை வெட்டிய வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கைது, வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனச்சரகரகத்திற்குட்பட்ட கலர்பாளையம் வனப்பகுதியில் பேரணாம்பட்டு வனச்சரகர் மோகன்வேல் தலைமையில் வனவர்கள் மாதேஸ்வரன் இளையராஜா, கார்த்திக், வன காவலர்கள் பிரகாஷ், சினேகா, நதியா ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு 3 பேர் கட்டைகளை வைத்து இறைச்சி வெட்டி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த வனத்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், கலர்பாளையம் கிராமம், ஒரே குடும்பத்தை சேர்ந்த சம்பத்(65), இவருடைய மகன்கள் காசி(35), ராஜா(30) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் அதே பகுதியில் உள்ள வருவாய் துறையினருக்கு சொந்தமான குட்டை ஒன்றில் காட்டு பன்றி விழுந்து இறந்த கிடந்தது. அதனை கொண்டு வந்து, இறைச்சியை வெட்டிக்கொண்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின்பேரில், வனத்துறையினர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தாலா ரூ.10 ஆயிரம் என ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.