Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

10 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணை: வழிப்பறி வழக்கில் ரவுடி விடுதலை

வேலுார், செப்.5: கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த வழிப்பறி வழக்கு விசாரணை முடிவில் புகார்தாரர் அளித்த சாட்சியத்தை அடுத்து பிரபல ரவுடி உதயா விடுதலை செய்யப்பட்டார். வேலூர் ஓல்டு டவுன் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த், ஏசி மெக்கானிக். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரவுடி உதயா கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் கத்தியை காட்டி மிரட்டி 2 ஆயிரத்து 750 ரூபாய் பணம் பறித்துச் சென்றார். அதேபோல் மீண்டும் கத்தியால் தாக்கி ஆயிரம் ரூபாய் பறித்துச் சென்று கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுதொடர்பாக ஆனந்த் அளித்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் நீதிபதி இளவரசன் வழக்கை தொடர்ந்து விசாரணை நடத்தினார். விசாரணையின்போது, வழிப்பறி புகார் அளித்த ஆனந்த், உதயாவை எனக்கு தெரியாது, இந்த வழக்கு தொடர்பான எந்த தகவலும் எனக்கு தெரியாது.

வீட்டுக்கு செல்லும்போது போலீசார் என்னிடம் கையெழுத்து வாங்கினர். ஆனால் நான் புகார் அளிக்கவில்லை என சாட்சி சொன்னார். இதையடுத்து உதயாவுக்கு எதிரான புகாரில் சந்தேத்திற்கு அப்பாற்பட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி அவரை விடுதலை செய்தார். ரவுடி உதயாவுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.