Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வேலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பெண் கைது

வேலூர், ஆக. 5: வேலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (எ) மகேஷ்வரி (42). இவர் மற்றும் சிலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரதட்சணை வழக்கில் வேலூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு வேலூர் மகிளா விரைவு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மகேஷ்வரி வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக அவருக்கு கோர்ட்டில் இருந்து பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து மகேஸ்வரியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட்டை கோர்ட் பிறப்பித்தது. இதையடுத்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார், மகேஷ்வரியை நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.