Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திர பெண்ணிடம் நகை திருடிய ஆசாமி கைது தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் காட்பாடி வழியாக சென்ற ரயிலில்

வேலூர், மார்ச் 4: காட்பாடி வழியாக பெங்களூரு சென்ற ரயிலில் ஆந்திர பெண்ணிடம் நகைகளை திருடிய ஆசாமியை போலீசார் கைது ெசய்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கைப்பற்றினர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தை சேர்ந்தவர் எர்ரமேட்டி ராமாராவ். இவரது மனைவி வெர்சம்செட்டி தேவி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி காக்கிநாடாவில் இருந்து பெங்களூரு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராஜமகேந்திரவரத்தில் இருந்து பெங்களூரு கே.ஆர்.புரம் வரை பயணம் ெசய்தார். ரயில் காட்பாடி ரயில் நிலையத்ைத கடந்த போது, தனது பையில் வைத்திருந்த ஒன்றரை சவரன் தங்க கம்மல், 40 கிராம் வெள்ளி கால் கொலுசை மர்ம ஆசாமி திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக தேவி காட்பாடி ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் பழைய குற்றவாளி ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில், காட்பாடி ரயில்வே இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் எஸ்எஸ்ஐ சுப்பிரமணி, ஏட்டு சத்தியமூர்த்தி, காவலர் வினோத்குமார் கொண்ட குழுவினர் நேற்று காலை காட்பாடி ரயில் நிலைய நடைமேடை 1ல் சந்தேகப்படும் படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த வேணுகோபால்(70) என்பதும், ரயிலில் வெர்சம்செட்டி தேவியிடம் நகை திருடியதையும் ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஒன்றரை சவரன் கம்மல், வெள்ளிக்கொலுசும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து வேணுகோபாலை கைது செய்த ரயில்வே ேபாலீசார் அவரை ேகார்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.