Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆட்டோ விபத்தில் பெண் உட்பட 5 பேர் காயம் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றபோது

கே.வி.குப்பம்,பிப்.4: கே.வி.குப்பம் அடுத்த மயிலாடும் மலைக்கோயிலுக்கு செல்வதற்காக பேரணாம்பட்டு தாலுகா மிட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் என்பவர் தனது தம்பி, தம்பியின் மனைவி, அவரது குழந்தைகள் என 5 பேர் குடும்பத்துடன், நேற்று ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மேல்மாயில் - மேல்மாங்குப்பம் சாலையில் வழக்காடிப்பட்டி எனும் பகுதிக்கு வந்தபோது, ஆட்டோ திடீரென நிலைதடுமாறி அங்குள்ள மின்கம்பம் மீது மோதியது‌. இதில் கார்த்திக் மனைவி ஜீவா(20) தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். மற்றவர்கள் லேசான காயமடைந்தனர். தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ மோதிய வேகத்தில் அங்கிருந்த மின்கம்பம் பழுதடைந்து சாய்ந்தது. இதுதொடர்பாக கே.வி.குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.