வேலூர், அக்.2: மதுராந்தகம் இடைத்தேர்தலில் முதல்வர் பிரசார பாதுகாப்பு பணிக்காக வேலூரில் இருந்து 250 போலீசார் சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மதுராந்தகம் (தனி) தொகுதியில் தவெக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் மதுராந்தகம் தொகுதியில் இன்று நடைபெறும் பிரசாரத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்.
இதையொட்டி மதுராந்தகம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் இருந்து முதல்வர் விஜய் பாதுகாப்பு பணிக்காக வேலூர் எஸ்பி சிவராமன் தலைமையில் 250 போலீசார் மதுராந்தகத்துக்கு நேற்று காலை புறப்பட்டு சென்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

