Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரியூரில் சாமியாரை எஸ்எஸ்ஐ தாக்கிய சம்பவம்; சமூக வலைதளங்களில் மத கலவரத்தை தூண்டும் தகவல்களை பதிவிடும் நபர் மீது வழக்கு: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

வேலூர், அக்.2: அரியூரில் நடந்த சாமியாரை எஸ்எஸ்ஐ தாக்கிய சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் மத கலவரத்தை தூண்டும் வகையில் தகவல்களை பதிவிட்டது தொடர்பாக வழக்குப்பதிந்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் அடுத்த அரியூர் பகுதியில் ஆகஸ்ட் 31ம் தேதி இரவு 11 மணியளவில் வயதான சாமியார் ஒருவர், பொற்கோயில் நோக்கி சாலையில் நடந்து சென்றார். அப்போது, அங்கு நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ நரசிம்மன், சாலையில் நின்றிருந்த சாமியாரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து அரியூர் போலீசார் நடத்திய விசாரணையில், ‘பாதிக்கப்பட்ட நபர் ஆறுமுகம்(65) என்பதும், அவர் கடந்த சில மாதங்களாக அரியூர் பகுதியில் சுற்றி வருவதும் தெரிந்தது. சாமியார் ஆறுமுகம் சம்பவத்தன்று போலீஸ் ரோந்து வாகனத்தின் குறுக்கே நின்றதாகவும், அப்போது, சாமியாரிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சாமியார் தாக்கப்பட்டார் என தெரியவந்தது.

இதையடுத்து, எஸ்எஸ்ஐ நரசிம்மன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில், எக்ஸ் தளத்தில் மதகலவரத்தை தூண்டும் விதமாக மேற்கண்ட தகவல்கள் பரப்பியது தொடர்பாக, வேலூர் எஸ்பி அலுவலக சமூக ஊடகப்பிரிவு எஸ்ஐ பத்மாவதி, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.