Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடந்த முறையை விட 1,262 பேர் ஆப்சென்ட் அதிகம்

வேலூர்: வேலூரில் கடந்த மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வை 15 மையங்களில் 5,736 தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் 5,551 பேர் தேர்வு எழுதினர். 185 பேர் ஆப்சென்ட் ஆகினர். வினாத்தாள் கசிவு காரணமாக நீட் மறுதேர்வு நேற்று நடந்தது. இதில், வேலூரில் 16 மையங்களில் 6,253 பேர் விண்ணப்பித்தனர். இதில் 4,806 பேர் நீட் தேர்வை எழுதினர். 1,447 பேர் ஆப்சென்ட் ஆகினர். கடந்த ேம மாதம் நடந்த தேர்வை விட நேற்று நடந்த 1,262 பேர் அதிகமாக ஆப்சென்ட் ஆகினர். வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வின் மீதான நம்பிக்கை இழந்து வருவதாக பெற்றோர் தெரிவித்தனர்.