Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பயிற்சியில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

வேலூர், ஜூன் 19: டிஜிட்டல் முறையில் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் கவனமுடன் செயல்பட வேண்டும் என கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பயிற்சியில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான 3 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. சென்னை மத்திய மக்கள் தொகை உதவி இயக்குனர் திரிசிஷா, வேலூர் புள்ளியியல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, கேட்க வேண்டிய விவரங்கள் குறித்து 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.