Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லாரி டிரைவரிடம் தங்க செயின் பறிப்பு: மர்ம ஆசாமிக்கு வலை

வேலூர், ஜூன் 18: வேலூர் பழைய பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை லாரி டிரைவரிடம் செயின் பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(28), லாரி டிரைவர். இவர் புனேவில் இருந்து வெங்காயம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு நேற்று வந்தார். அதிகாலை 5 மணியளவில் வேலூர் பழைய பஸ் நிலையலத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுவிட்டு வெளியே வந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென விஜய் கழுத்தில் அணிந்திருந்த முக்கால் சவரன் தங்க செயினை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் திருடன், திருடன் என கூச்சலிட்டார். அங்கிருந்தவர்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த ஆசாமி தப்பி ஓடிவிட்டார்.