Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேலூர் புதிய மற்றும் பழைய பஸ்நிலையத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 2 தனியார் பஸ்களுக்கு நோட்டீஸ்: விதிமீறல் தொடர்ந்தால் பர்மிட் ரத்து எச்சரிக்கை

வேலூர், ஜூலை 15: வேலூர் புதிய மற்றும் பழைய பஸ்நிலையத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 2 தனியார் பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. விதிமீறல் தொடர்ந்தால் பர்மிட் ரத்து செய்யப்படும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.வேலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட கலெக்டர் லீலா அலெக்ஸ்சுக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் வேலூர் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையத்தில் பஸ்களில் சோதனை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா? என்று, 2 பஸ்நிலையங்களிலும் 20க்கும் மேற்பட்ட பஸ்களில் ஏறி பயணிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது 2 தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது தெரியவந்தது. 5 ரூபாய் டிக்கெட்டுக்கு ரூ.7 வழங்கியதும், ரூ.7 டிக்கெட்டுக்கு ரூ.10க்கான டிக்கெட் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து விதிமீறிய 2 பஸ் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, நோட்டீஸ் அளித்துள்ளனர்.

இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் கூறுகையில், ‘பஸ் பயணிகளிடம் அரசு நிர்ணயனம் செய்த தொகை தவிர கூடுதலாக அதிக கட்டணம் வசூலித்தால் அபராதம் விதிப்பதுடன், பர்மிட் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், அனைத்து பஸ்களும் அவரவருக்கு வழங்கப்பட்ட ரூட்டில் கட்டாயம் செல்ல வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.