ஆயுத பூஜையை முன்னிட்டு காட்பாடி வழியாக கோரக்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வேலூர், அக்.14: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் நெரிசலை குறைக்க போத்தனூர் மற்றும் ேகாரக்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இன்று புதன்கிழமை காலை 7.40 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு செல்லும் வண்டி எண் 06149 போத்தனூர்-கோரக்பூர் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, ஓங்கோல் விஜயவாடா, ராஜமுந்திரி, துவ்வாடா, விஜயநகரம், பாலாசா, குர்தா ரோடு, புவனேஷ்வர், கட்டாக், பட்ராக், பாலாசூர் என நாளை இரவு 8 மணிக்கு கோரக்பூரை அடைகிறது.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 06150 கோரக்பூர்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் வியாழன் இரவு 11 மணிக்கு கோரக்பூரில் இருந்து புறப்பட்டு பாலாசூர், பட்ராக், கட்டாக், புவனேஷ்வர், குர்தா ரோடு, பாலாசா, விஜயநகரம், துவ்வாடா, ராஜமுந்திரி, விஜயவாடா, ஓங்கோல் வழியாக சென்னை எழும்பூரை சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு வந்தடைகிறது.இந்த சிறப்பு ரயில்களில் 10 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் மற்றும் 2 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன்கள் இணைக்கப்பட்டிருக்கும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடந்து வருகிறது என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


