Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அணைக்கட்டு அருகே சாலை வசதி இன்றி; சாலை அமைக்க கோரிக்கை

அணைக்கட்டு, நவ.3: அணைக்கட்டு அருகே மருதவல்லிமேடுமலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த சிறுமியின் உடலை டோலி கட்டி 7 கி.மீ. தூரம் தூக்கி சென்றனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப்பகுதி மருதவல்லிமேடுமலை கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் மகள் திவ்யா (15). இவர் ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். மாணவிக்கு இதய நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது.

தொடர்ந்து, மீண்டும் சென்னையில் உள்ள அதே மருத்துவமனையில் 2வது முறையாக சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. பின்னர் ஜார்த்தான்கொல்லை மலைப்பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே ஜார்த்தான்கொல்லை மலை கிராமத்தில் இருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடலை ஊசூர் அருகே சிவநாதபுரம் கலங்கமேடு வழியாக ஆம்புலன்ஸ் செல்லும் இடம் வரை எடுத்துவரப்பட்டது. பின்னர் அவர்களது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாததால் அவரது உடலை சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் டோலிகட்டி தோள்மேல் தூக்கிக்கொண்டு மருதவல்லிமேடு மலை வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் தூக்கி சென்றனர். சாலை வசதி இல்லாத ஒரே காரணத்தினால் மருதவல்லிமேடு மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் இதுபோன்ற பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். எனவே அரசு அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டுவிரைவாக அல்லேரி மலைக்கு தார் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மருதவல்லிமேடு மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால், உயிரிழந்த சிறுமியின் உடலை டோலிக்கட்டி தூக்கிச்சென்ற உறவினர்கள்.