Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தமிழகத்தில் தீயணைப்பு நிலையங்களில் உள்ள வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி; அதிகாரிகள் தகவல்

வேலூர், நவ.2: வேலூர் உட்பட தமிழ்நாடு முழுவதும் தீயணைப்பு நிலையங்களில் உள்ள 834 தீயணைப்பு மீட்பு பணிகளுக்கான வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் காவல்துறையில் இன்ஸ்பெக்டர் தொடங்கி காவல்துறை உயர்அதிகாரிகள் வரையில் பாதுகாப்பு பணிக்காக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது.

மேலும் காவல்துறைக்கான இந்த வாகனங்கள் எங்கு உள்ளது என்று கண்காணிக்கும் வகையில் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில்நீர்தாங்கி வாகனம், பெருமநீர்தாங்கி வாகனம், நவீன நீர்தாங்கி வாகனம், நுரைநீர்தாங்கி வாகனம், அவசரகால வாகனம், போக்குவரத்து வாகனம் உட்பட சுமார் 15 வகையான வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 834 வாகனங்கள் தீயணைப்புத்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இனி மாநிலத்தில் எந்தெந்த தீயணைப்பு வாகனங்கள் எந்த நேரத்தில் என்ன பணிகாரணமாக எங்கு சென்றுள்ளது. என்று அனைத்தும் சென்னை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் நீர்தாங்கி 5 வாகனங்கள், பெருமநீர்தாங்கி 2 வாகனங்கள், நவீன நீர்தாங்கி வாகனம் 1, நுரைநூர்தாங்கி 1, அவசரகால வாகனம் 1, கல்வி பேருந்து 1, போக்குவரத்து வாகனம் 1 என்று மொத்தம் 18 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.