Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

அடையாளம் தெரியாத நபர் சரமாரி அடித்துக் *லை; பொன்னையாற்றில் சடலம் வீச்சு

பொன்னை, நவ.2: மேல்பாடி அருகே அடையாளம் தெரியாத நபரை மர்மநபர்கள் சரமாரி அடித்துக்கொன்று பொன்னை ஆற்றில் சடலத்தை வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி அருகே பொன்னை ஆற்றில் மேல்பாடி தரைப்பாலத்தின் கீழ் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக மேல்பாடி போலீசருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேல்பாடி போலீஸ் எஸ்ஐ குமரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இறந்து கிடந்த நபரின் உடலில் தலை உட்பட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால், சரமாரி அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கருதுகின்றனர். கொலை செய்யப்பட்டவருக்கு சுமார் 50 வயது இருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சுற்றுப்புற கிராமங்களில் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் எண்களை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 834 தீயணைப்பு மீட்பு பணி