Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த தேனி வாலிபர் கைது;

வேலூர், அக்.28: தீபாவளி பண்டிகையொட்டி ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த தேனியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்ஐ கார்த்திக் செல்வம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காட்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்பாடி ரயில் நிலையம் அருகே சந்தேகமளிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம், நடத்திய விசாரணையில், அந்த நபர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்(30) என்பது தெரியவந்தது.

அவரது பையை சோதனை செய்ததில் அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு ஆந்திரா மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.