Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அணைக்கட்டில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

அணைக்கட்டு, செப்‌. 28: அணைக்கட்டு பகுதியில் கஞ்சா விற்ற 2வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாலிபர்கள் சிலர் கஞ்சா வைத்துக் கொண்டு விற்பதாக அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் கஞ்சா வைத்திருந்த வாலிபர்களை போலீசார் அணைக்கட்டு காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், குச்சிப்பாளையம் காந்தி ரோட்டை சேர்ந்த பரத் (22), அணைக்கட்டு மெயின் பஜாரை சேர்ந்த சஞ்சய் (22) என்பதும் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இருவரிடமும் இருந்து 100 கிராம் 100 கிராம் வீதம் 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் கஞ்சாவை எங்கு வாங்கி வந்தார்கள்? யாருக்கு விற்பதற்கு வைத்திருந்தார்கள். இதே போல் எங்கெல்லாம் விற்பனை செய்து உள்ளார்கள் என அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.