Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வரும் 30ம் தேதி தொழில் முனைவோருக்கான ஏற்றுமதி விழிப்புணர்வு முகாம்: கலெக்டர் தகவல்

வேலூர், ஜூலை 28: வேலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கான ஏற்றுமதி குறித்த விழிப்புணர்வு முகாம் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது.வேலூர் மாவட்டத்தில் ஏற்றுமதி வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் மாவட்ட தொழில் மையம் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநர் சார்பில் விழிப்புணர்வு முகாம் வரும் 30ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் 5ம் தளத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் ஏற்றுமதிக்கான பதிவு நடைமுறைகள், அரசின் ஊக்கத் திட்டங்கள், தரச்சான்றிதழ்கள், சந்தை வாய்ப்புகள், பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் தொடர்புடைய துறைகளின் சேவைகள் குறித்து நிபுணர்களால் விளக்கமளிக்கப்படும்.

எனவே, மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.