Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குடியாத்தம் அருகே கோயில் விழாவில் தகராறு வாலிபருக்கு கத்திக்குத்து

கே.வி.குப்பம், ஆக.26: குடியாத்தம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில் கோயில் திருவிழா நடந்தது. இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது மாலைகளை அதே கிராமத்தைச் சேர்ந்த செண்பகராமன் (50) என்பவர் ஊர்வலமாக எடுத்து சென்றார். அப்போது சிலர் இடையூறு செய்ததாக தெரிகிறது. இதனால் அவர்களை செண்பகராமன் தடுத்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செண்பகராமன், தான் வைத்திருந்த கத்தியால் அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (25) என்பவரை குத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரவீன்குமாரின் தாய் சுஜாதா குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். இதேபோல் செண்பகராமனும் புகார் கொடுத்தார். இருதரப்பு புகாரின்பேரில் அதே பகுதியை சேர்ந்த யோகி, தமிழ், பிரவீன்குமார், அரி மற்றும் செண்பகராமன் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பழனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் பேரணாம்பட்டு பகுதிகளில் இரவு, பகல் நேரங்களில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை படுஜோராக நடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.