Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குடியாத்தம் அருகே காரில் 15 கிலோ குட்கா கடத்திய வாலிபர் கைது

கே.வி.குப்பம், ஆக.28: குடியாத்தம் அருகே காரில் 15 கிலோ குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த இந்திரா நகர் பகுதியில் குடியாத்தம் டவுன் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், ஓட்டுநர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காருடன் சுமார் 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் மேல் ஆலத்தூர் ஊராட்சி நத்தமேடு பகுதியை சேர்ந்த சரத்குமார்(34) என்பதும் ஆந்திராவிலிருந்து விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து சரத்குமாரை கைது செய்த போலீசார் மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாரேனும் உள்ளார்களா என விசாரித்து வருகின்றனர்.