Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வேலூர் பழைய பஸ்நிலையத்தில் 2 பைக்குகளை திருடிய கிருஷ்ணகிரி வாலிபர் கைது

வேலூர், ஜூன் 26: வேலூர் பழைய பஸ்நிலையத்தில், 2 பைக்குகளை திருடிய கிருஷ்ணகிரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த இரு பைக்குகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த வேலூர் வடக்கு குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். வேலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் பைக்குகள் திருடிய மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை போலீசார் கோட்டை சுற்றுச்சாலையில் மின் பஸ் நிலையம் அருகே வாகன சோதனை நடத்தினர்.

சோதனையின்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவலை கூறியுள்ளார். இதையடுத்து அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில், அவர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் (33) என்பதும் இவர் பழைய பஸ் நிலையம் பகுதியில் இரண்டு பைக்குகளை திருடியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சூரிய பிரகாஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.