Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் ரூ.10.99 லட்சம் காணிக்கை செலுத்திய பக்தர்கள்: 3.5 கிராம் தங்கம், 41.5 கிராம் வெள்ளியும் இருந்தது

குடியாத்தம், மே 26: குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் பக்தர்கள் ரூ.10.99 லட்சம் பணத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கெங்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1ம் தேதி சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு மே 15ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அவ்வாறு வந்த பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தி சென்றனர்.

இந்நிலையில் கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று சிரசு மண்டபத்தில் நடைபெற்றது. அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் வகித்தனர்.

இதில் ரூ.10 லட்சத்து 99 ஆயிரம் பணம், 3.5 கிராம் தங்கம், 41.5 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.