தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.8.80 லட்சம் பண பரிமாற்றம் குறித்து விசாரணை:
வேலூர், செப்.23: வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.8.80 லட்சம் பண பரிமாற்றம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு துறைசார்ந்த அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காட்பாடி தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஎஸ்பி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் மைதிலி மற்றும் போலீசார் அதிரடியாக நுழைந்து, வாயிற்கதவை மூடியதுடன், தாலுகா அலுவலக அலுவலர்கள், ஊழியர்கள் யாரும் வெளியில் இருந்து உள்ளே வரவும், உள்ளிருந்து வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை.


