மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடகம் சமர்ப்பித்த மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கை போலியானது: வேலூரில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
வேலூர், செப்.23: மேக்கேதாட்டு அணை தொடர்பாக மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடகம் சமர்ப்பித்த வரைவு திட்ட அறிக்கை போலியானது என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான பி.ஆர்.பாண்டியன் கூறினார்.மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுப்பது, ராணி மணலில் அணைக்கட்ட திட்டமிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை காரைக்கால் தொடங்கி திருவாரூர் வரை 5 நாள் பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான பி.ஆர்.பாண்டியன் வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடகம் கொடுத்தது போலியான வரைவு திட்ட அறிக்கையாகும். காவிரி ஆணையம் அனுமதியின்றி, கர்நாடகாவில் அணை கட்டுவதில் தனது சுயநலத்துக்காக அம்மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார் தீவிரம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.


