வேலூர், செப்.23: வேலூரில் நேற்றிரவு டிப்பர் லாரியின் முன்பக்க சக்கரம் உடைந்து ஓடி பைக் மீது மோதியதில் 2 பேர் பலியானார்கள். அதேபோல் சுவற்றில் பைக் மோதி கீழே விழுந்து பள்ளி மாணவன் பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் சார்பனாமேடு ஆரோக்கிய மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் சிலுவை மேத்யூ என்பவரது மகன் செல்வின்(16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று இரவு 7 மணியளவில் செல்வின், தனது பைக்கில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். சாலை வளைவில் வேகமாக திரும்பியதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் இருந்த கோயில் சுவற்றில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட செல்வின் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற வேலூர் வடக்கு போலீசார் செல்வின் சடலத்தை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், பள்ளிகொண்டா மார்க்கத்தில் இருந்து வேலூர் நோக்கி டிப்பர் லாரி ஒன்று சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதன் முன்னால் பைக்கில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். இரவு 9.30 மணியளவில் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்றபோது டிப்பர் லாரியின் முன் பக்க சக்கரம் உடைந்து பைக் மீது மோதி கீழே தள்ளி இழுத்துச் ெசன்று நின்றது. டயருடன் சக்கரம் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு ஓடிச்சென்று விழுந்தது.


