Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலூர் சரக டிஐஜி மகேஷ் பொறுப்பேற்பு: எஸ்பி அலுவலகத்தில் ஆய்வு

வேலூர், மே 23: வேலூர் சரக டிஐஜி மகேஷ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து வேலூர் எஸ்பி அலுவலகத்தில் சென்று ஆய்வு செய்தார். வேலூர் சரக டிஐஜியாக மகேஷ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வேலூர் சரக அலுவலகத்தில் டிஐஜி மகேஷ் நேற்று மாலை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு எஸ்பி சிவராமன், ஏஎஸ்பி தனுஷ்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் அதிகாரிகள், டிஐஜி அலுவலக அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து வேலூர் எஸ்பி அலுவலகத்திற்கு சென்ற டிஐஜி அங்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். அப்போது எஸ்பி அலுவலக போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கனவே இங்கு பணியாற்றிய டிஐஜி தர்மராஜன் முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.