Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அணைக்கட்டு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கலையரசு இல்ல திருமண விழா: சக்தி அம்மா தலைமையில் நடந்தது

வேலூர், மே 19: அணைக்கட்டு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கலையரசு இல்ல திருமண விழா சக்தி அம்மா தலைமையில் நேற்று நடந்தது. அணைக்கட்டு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கலையரசு மற்றும் விஜி கலையரசு தம்பதியின் இளைய மகள் டாக்டர் பிரியங்காவுக்கும், விருதாச்சலம் டாக்டர் சேதுபதி-டாக்டர் கோப்பெரும்தேவி தம்பதியின் மகன் சிவபிரகாஷ் ஆகியோரின் திருமணம் நேற்று காலை புரம் நாராயணி மஹாலில் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசகர், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு,

எம்எல்ஏகள் வேலழகன், சுகுமார், டிஎன்பிஎஸ்சி சேர்மேன் காசிவிசுவநாதன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தனவேல், மதேஷ்வரன், நீதி அரசர் கலையரசன், டீக்கராமன், வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி, விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், நறுவீ மருத்துவமனை தலைவர் சம்பத், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வீரப்பன், கர்நாடகா மாநில தேர்தல் ஆணையர் அன்புகுமார் ஐஏஎஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தொடர்ந்து நேற்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடந்த திருமணத்தை சக்தி அம்மா தலைமையில் திருமணம் நடந்தது. இதில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அன்பழகன், தங்க கோயில் மேலாளர் சம்பத், ரத்தினகிரி பாலமுருகன் அடிமை, கலவை சச்சிதனந்தசுவாமி உட்பட முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு முக்கிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வந்தவர்களை டாக்டர்கள் அருண்குமார், நிஷா, முன்னாள் தலைவர் சீனிவாசன், கருகம்பத்தூர் ஊராட்சி தலைவர் நிவேதிதாகுமரன் ஆகியோர் வரவேற்றனர்.