Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக 500 சாலை பணிகளை முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலை துறை உத்தரவு

வேலூர், செப்.18: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக 500 சாலை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க அனைத்து கோட்ட பொறியாளர்களுக்கும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலைகள் என 70 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் உள்ளன. இதில் மாவட்ட இதர சாலைகள் மட்டுமே 45 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளன. இச்சாலைகளை பராமரிக்கவும் மேம்படுத்தவும் தமிழகம் முழுவதும் 68 இடங்களில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக, ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, சாலை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாாவது:

தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக சாலைகள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 500 சாலைகளில் பணிகள் நடைபெறுகின்றன. இதில், 200 சாலைத் திட்டப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய சாலைப் பணிகள் 50 சதவீதம் முடிந்துள்ளன.

அனைத்து பணிகளும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பணிகளை கண்காணிக்க தலைமை பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சென்று பணிகளை மேற்பார்வை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டெண்டர் தேதி நிறைவுக்கு முன்பே பணிகள் தரமாக செய்து முடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.