Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

7 மாணவர்கள் மத்திய பல்கலைக்கழங்களில் பயில தேர்வு வேலூர் அரசு மாதிரிப்பள்ளியில் படித்த

வேலூர், ஆக.18: வேலூர் அரசு மாதிரிப்பள்ளியில் படித்த 7 மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் பயில தேர்வாகி உள்ளனர். ேவலூர் மாவட்டம் பெருமுகையில் அரசு மாதிரிப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் உள்ள விடுதியில் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த ஆண்டு நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், வேலூர் அரசு மாதிரி பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளி மாணவியான எஸ்.லோகேஷ்வரி, வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில தேர்வாகி உள்ளார். அதேபோல், மத்திய அரசின் பல்கலைக்கழங்களின் நுழைவு தேர்வில் 6 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகங்களில் சேர தகுதி பெற்றுள்ளனர்.