Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அணைக்கட்டு தாலுகாவில் 16 விஏஓக்கள் பணியிடமாற்றம்: ஆர்டிஓ உத்தரவு

அணைக்கட்டு, ஜூலை 18: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் நிர்வாக நலன் கருதி கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார். அதன்படி கெங்கநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன் அணைக்கட்டு விஏஓகவும், கெங்கநல்லூருக்கு கூடுதல் பொறுப்பு விஏஓவாகவும், அணைக்கட்டில் பணியாற்றிய பிரசாத் இலவம்பாடி விஏஓவாகவும், அங்கு பணியாற்றிய மணிகண்டன் கருங்காலி குரூப் கிராமங்களுக்கு விஏஓவாகவும், அங்கு பணியாற்றிய சிவமூர்த்தி திப்பசமுத்திரம் விஏஓவாகவும், கரடிகுடி ஓங்கப்பாடி கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்பு விஏஓவாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஒடுகத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பிரேம்குமார் மேல்பள்ளிப்பட்டு விஏஓ வாகவும், சின்னபள்ளிகுப்பம் கிராமத்திற்கு கூடுதல் பொறுப்பு விஏஓவாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய குமரேசன் ஒடுக்கத்தூர் விஏஓ வாகவும், கீழாச்சூர் விஏஓ கனகராஜ் பொய்கை விஏஓவாகவும், சத்தியமங்கலத்திற்கு கூடுதல் பொறுப்பு விஏஓவாகவும்,

பொய்கை விஏஓ முனிரத்தினம் வல்லண்டராமம் கிராமத்திற்கும், அங்கு பணியாற்றிய ரேணு செதுவாலை கிராமத்திற்கும், அங்கு பணியாற்றிய கார்த்திக் பள்ளிகொண்டாவிற்கும், கீழாச்சூருக்கு கூடுதல் பொறுப்பு விஏஓவாகவும், கரடிகுடி விஏஓ சத்தியா வேப்பங்குப்பத்திற்கும், அகரம் கிராமத்திற்கு கூடுதல் பொறுப்பு விஏஓவாகவும், பூதூர் விஏஓ தங்கமுத்து கந்தனேரி விஏஓவாகவும் அங்கு பணியாற்றிய கிரிஜாவை வேலூர் தாலுக்கா கொண்வாட்டத்திற்கும், விருப்பாச்சிபுரம் விஏஓ செந்தூர்வேலன் பூதூர் விஏஓவாகவும், சேக்கனூர் விஏஓ கிருஷ்ணவேணி செம்பேடு விஏஓவாகவும், ஊனை விஏஓ நந்திவர்மன் வாணியம்பாடி கிராமத்திற்கு கூடுதல் பொறுப்பு விஏஓவாகவும், குப்பம், முருக்கேரி விஏஓ வித்யா சேக்கனூர் கிராமத்திற்கு கூடுதல் பொறுப்பு விஏஓ என மொத்தமாக தாலுகாவில் 16 விஏஓக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.