Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

11 வயது சிறுமியிடம் அத்துமீறிய வியாபாரிக்கு 7 ஆண்டு ஜெயில்: வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பு

வேலுார், அக்.17–: வேலூர் அருகே 11 வயது சிறுமியிடம் அத்துமீறிய மளிகை கடைக்காரருக்கு வேலூர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. வேலுார் அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் குப்புசாமி(59). மளிகை கடை வியாபாரி. இவர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியிடம், கடந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதுகுறித்து தனது தாயிடம் சிறுமி தெரிவித்தார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் அளித்த புகாரின் பேரில், வேலுார் அனைத்து மகளிர் போலீசார் குப்புசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோனிகா, குற்றம் சாட்டப்பட்ட குப்புசாமி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் குப்புசாமி ஆண்கள் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.