Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காமராஜர் பிறந்த நாளன்றும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு, சமபந்தி விருந்து: தமிழக அரசு உத்தரவு

வேலூர், அக்.17: சுதந்திர தினம் மற்றும் அண்ணா பிறந்த நாளில் திருக்கோயில்களில் நடத்தப்படும் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தை பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்றும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் சுதந்திர தினம், தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் என 2 நாட்கள் இந்து சமய அறநிலையத்துறையின் ஒவ்வொரு பகுதியிலும் முக்கிய திருக்கோயில்களில் சிறப்பு வழிபாட்டுடன், சமபந்தி விருந்து வழங்கப்படுகிறது.

இந்த நிைலயில் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தளமிட்ட பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி அன்றும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, இது அடுத்த 2027ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அந்த உத்தரவில் சிறப்பு வழிபாடு, சமபந்தி விருந்துக்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் மற்றும் குடிநீர் தரமாகவும் சுத்தமாகவும் இருப்பதை திருக்கோயில் நிர்வாகிகளும், செயல் அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.

சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சிக்கான செலவினத்தொகை முன்னதாக வரவு செலவுத்திட்டத்தில் அனுமதி பெற்றதாக இருந்தாலும், செலவினத்தொகை வரவு செலவுத்திட்டத்திற்கு கட்டுப்பட்டு இருந்தாலும், ஆடம்பரமின்றி தேவையற்ற செலவுகளை தவிர்த்து எளியமுறையில் இருத்தலும் வேண்டும். எனவே, மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் தங்கள் பிரிவுக்கு உட்பட்ட திருக்கோயில்களுக்கு சுற்றறிக்கை மூலம் தகுந்த அறிவுரைகள் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பாக எவ்வித புகாருக்கும் இடமில்லாமல் நடத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றிக்கை நேற்று அனைத்து இணை ஆணையர்கள், உதவி ஆணையர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.