Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வாலாஜாவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரமாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம்; ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது

வாலாஜா, செப். 17: வாலாஜாவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரமாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்து ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, மாவட்டம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் வழிபட்டனர்.இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவாக விநாயகர் சிலைகள் விஜர்சனம் நேற்று வாலாஜா பகுதிகளில் நடந்தது. வாலாஜா நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு கடந்த 14ம் தேதி பிரதீஷ்டை செய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் விஜர்ஜன ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். வேலூர் கோட்ட செயலாளர் ரவி, வாலாஜா நகர தலைவர் பிரேம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இங்குள்ள ஐயப்பன் கோயில் அருகே ஊர்வலத்தை தன்வந்திரி ஆரோக்கிய பீடாதிபதி தவத்திரு முரளிதர் சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. இதில் சிவ வாத்தியம், நாதஸ்வரம், பஜனை பேன்டுவாத்தியம், சிறுவர்களின் கோலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. தொடர்ந்து பஸ்நிலையம் அருகே கூட்டம் நடந்தது. இதில் இந்து முன்னணி மாநில அணி செயலாளர் ரத்தின குமார் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து ஊர்வலம் வி.சி மோட்டூரில் கிராமத்திற்கு சென்றது. அங்குள்ள ஏரியில் 20க்கும் மேற்பட்ட விநாயகர்கள் விஜர்ஜனம் செய்யப்பட்டது.

இதில் மாவட்ட எஸ்பி சிபின் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. முன்னதாக இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று காலை மாநில ஊடகப்பிரிவு செயலாளர் கண்ணன், வேலூர் கோட்ட தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலையில் வாலாஜாவில் உள்ள ஐயப்பன் கோயிலிருந்து ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று இங்குள்ள வீ.சி. மோட்டூர் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.