ஜோலார்பேட்டை, செப்.17: ேஜாலார்பேட்ைட வழியாக சென்ற ரயிலில் கேட்பாரற்று கிடந்த 32 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலைய போலீசார் ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா? என அவ்வப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நேற்று ரயில்வே போலீசார் மற்றும் சேலம் உட்கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில்களில் கழிப்பறையின் அடியிலும் பயணிகளின் இருக்கையின் அடியிலும் கேட்பாரற்று கிடந்த சோல்டர் பை மற்றும் மூட்டைகளை ஆய்வு செய்தபோது அதில் 32 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரயில் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ஜோலார்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


