Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆற்காடு அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

ஆற்காடு, செப். 17: ஆற்காடு அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆற்காடு அடுத்த புதுப்பாடி இலுப்பை ரோட்டில் உள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் கீர்த்தனா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று திடீர் சோதனையிட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்து உரிமையாளர் சேகரிடம் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்கள்.