வேலூர், ஆக.17: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.9.93 கோடிக்கு மது விற்பனையானது.தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ.90 முதல் ரூ.100 கோடி வரையில் மது விற்பனையாவது வழக்கம். இதில் விழாக்காலங்களிலும், டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படும் நாட்களுக்கு முந்தைய நாளிலும் முன்கூட்டியே குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வார்கள். இதுபோன்ற நாட்களில் மது விற்பனை அதிகரிக்கும். அந்த வகையில் சுதந்திர தினமான நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கடந்த 14ம் தேதி டாஸ்மாக் விற்பனை இருமடங்கு அதிகரித்தது. இதேபோல் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் டாஸ்மாக் மாவட்டத்தில் உள்ள 94 கடைகளில் வழக்கமாக தினமும் ரூ.3.50 கோடி முதல் ரூ.4 கோடி வரை மது விற்பனை நடப்பது வழக்கம்.
+
Advertisement



