Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேலூர் ஐஸ் கட்டி தொழிற்சாலை அமோனியா வாயு கசிவு தொடர்பாக தந்தை, மகன் கைது

வேலூர், ஆக.17: வேலூர் ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு தொடர்பாக அதன் உரிமையாளர்களான தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர்கள் அப்துல்காதர் (50) அவரது மகன் இப்ராகிம் (27). இவர்கள் இருவரும் சேர்ந்து முள்ளிப்பாளையம் மாங்காய் மண்டி பகுதியில் குளிர்பான கடைகளுக்கு பார் ஐஸ் கட்டிகள் தயாரித்து வழங்கும் புதிய தொழிற்சாலையை அமைத்துள்ளனர். ஆனால் இதற்கு அரசின் அனுமதி பெறவில்லையாம்.

இந்நிலையில் இங்கு, கடந்த 15ம் தேதி மாலை சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது ஐஸ் கட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் சிலிண்டர் குழாயில் இருந்து அமோனியா காஸ் கசிந்துள்ளது. இதனால் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து மாங்காய் மண்டி பகுதி முழுவதும் காஸ் பரவியது. தகவலறிந்த வேலூர் தீயணைப்பு வீரர்கள் அம்மோனிய வாயு கசிவை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.