Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

2 லட்சம் ஆவின் பால் பாக்கெட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு

வேலூர், ஜூலை 17: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 2 லட்சம் ஆவின் பால்பாக்கெட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் ெதாைக கணக்கெடுப்பு நாடு முழுவதும் முதன்முதலாக, இந்தமுறை சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக அடுத்த மாதம் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. 2ம் கட்டமாக 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கிறது. முதல்கட்ட பணியாக https://se.census.gov.in என்ற இணைதள முகவரியில் மொபைல் போன் மூலம் பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு நாளை மறுநாள் 17ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது.

இந்த பணி வேலூர் மாவட்டத்திலும் அனைத்து தாலுகாக்களிலும் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊரக பகுதிகள் என்று மக்கள் தொகை கணக்ெகடுப்புப்பணிக்கு பயிற்சி முடித்த களப்பணியாளர்கள் நாளை மறுநாள் சுய கணக்கெடுப்புப்பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் வேலூர் கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியமான ஆவின் மூலமாக அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி வேலூர் ஆவினில் கொள்முதல் செய்யப்படும் சுமார் 95 ஆயிரம் லிட்டர் பாலில் 2 லட்சம் பால்பாக்கெட்டுகளில், மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு 2026 ஜூலை 17 முதல் 31 வரை, சுயகணக்கெடுப்பு மூலம் நாட்டின் முன்னேற்றத்தில் பங்களிப்போம்.

நமது சென்சஸ் நமது வளர்ச்சி. https://se.census.gov.in, மக்கள் தொைக கணக்கெடுப்பு இயக்குநரகம், தமிழ்நாடு என்று அச்சிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆவின் பால்பாக்கெட்டுகள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலம் விநியோகிக்கப்படும். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால்பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று ஆவின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.