Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அணைக்கட்டு அடுத்த மூலைகேட் அரசு தொடக்க பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி

அணைக்கட்டு, ஜூன் 16: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அணைக்கட்டு அடுத்த மூலைகேட் அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் அன்னையா தலைமை தாங்கினார். அணைக்கட்டு அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா சிறப்பு மருத்துவர் தினேஷ் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.

அவர் யோகா செய்வதை பார்த்து பள்ளி மாணவ, மாணவிகள் யோகா பயிற்சி செய்தனர். மேலும் தினமும் யோகா செய்வதன் நன்மைகள் குறித்தும், எப்படி நேரம் ஒதுக்கி யோகா செய்வது என்பது குறித்தும், யோகா மருத்துவர் தினேஷ் விளக்கம் அளித்து பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் ஜெயந்தி, மரிய புனிதா, கோகிலா உட்பட ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.