Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குடியாத்தத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்; 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம்

குடியாத்தம், அக். 14: குடியாத்தம்,கே.வி.குப்பம், பேரணாம்பட்டு, உள்ளிட்ட வட்டத்தை சேர்ந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டம், குடியாத்தம் ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கோட்டாட்சியர் செந்தில்குமார் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற நிலையில்,கோட்டாச்சியரின் நேர்முக உதவியாளர் வடிவேலு தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளை வைத்த விவசாயிகளின் ஒரு பிரிவினர், 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் பாதிப்படைவதாகவும், எனவே 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் வடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.