Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ரீல்ஸ் டீமுடன் சுற்றி வந்து பணியை முடித்த சிங்கப்பெண் அதிரடிப்படை ரியலாக செயல்படுவது எப்போது?

வேலூர், ஜூன் 11: வேலூர் புதிய பஸ்நிலையத்திற்கு ரீல்ஸ் டீமுடன் சுற்றி வந்து சிங்கப்பெண்கள் அதிரப்படை நேற்று பணியை முடித்துக்கொண்டது.வேலூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நேற்று தொடங்கியது. இதற்காக பெண் எஸ்ஐ, மகளிர் போலீசார் என 3 பேர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு சிங்கப்பெண் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஜீப் வழங்கி திட்டத்தினை தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த சிங்கப்பெண்கள் அதிரடிப்படையினர், ரீல்ஸ் டீமுடன் வேலூர் புதிய பஸ்நிலையத்திற்கு நேற்று சென்றுள்ளனர். அங்கு நுழைவு வாயிலில் நின்று ஜீப்பில் உள்ள மைக்கில் பேசுவது, பஸ்நிலையத்திற்கு வந்த பெண் பயணிகளிடம் கை குலுக்குவது, சில பயணிகளிடம் பேசுவது என்று பஸ்நிலையத்தை சுற்றி ஒரு ரவுண்டு நடந்து சென்றனர். பின்னர் கார் கண்ணாடியை ஸ்டைலாக திறந்து காரில் ஏறிச்செல்வது என்று உடன் சென்ற ரீல்ஸ் டீம் வெவ்வேறு விதமாக வீடியோக்களை எடுத்தனர். பின்னர் இந்த காட்சிகளை ஒருங்கிணைந்து சினிமா பேக்ரவுண்ட் மியூசிக்குடன் ரீல்ஸ் வெளியிடப்பட்டது. வேலூர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நேற்று ரீல்ஸ் வெளியிட்டு பணியை முடித்துக்கொண்டது.

இந்த ரீல்ஸ் தான் நேற்று சிங்கப்பெண் சிறப்பு படையினரின் பணியாக சமூக வலைதளங்களில் வெளியானது. சிங்கப் பெண் திட்டம் தொடங்கிய முதல்நாளிலேயே இவர்கள் ரீல்ஸ் டீமுடன் சென்று பணியை முடித்துக்கொண்டனர். ரியலாக களத்தில் இறங்கி பணியாற்றினால் தான் பள்ளி, சிறுமிகள் முதல் வயதான முதியவர்கள் வரை உள்ளவர்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க முடியும். வரும் காலத்திலாவது ரீல்ஸ் டீமுடன் சென்று ரீல்ஸ் போடுவதை நிறுத்தி, ரியல் பணியை செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.