Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரக்கோணத்தில் பணியாற்றியபோது பல பெண்களுடன் தொடர்பு; மனைவி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி அதிரடி கைது: வேலூர் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை

வேலூர், அக்.10: அரக்கோணத்தில் பணியாற்றியபோது பல பெண்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு தன்னை தாக்கியதாக கூறி மனைவி அளித்த புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பியை வேலூர் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் ஜாபர் சித்திக். இவர் குரூப்-1 தேர்வு எழுதி டிஎஸ்பியாக தேர்வானார். பின்னர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டிஎஸ்பியாக கடந்த 2024ம் ஆண்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவருக்கும் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் ஷோபனா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அவரை ஜாபர் சித்திக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஜாபர் சித்திக், மற்றும் ஷோபனா தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ஜாபர் சித்திக் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு ஷோபனாவை அடித்து துன்புறுத்தி வந்தாராம். இதுகுறித்து அரக்கோணம் காவல் நிலையத்தில் ஷோபனா புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதற்கிடையில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ஜாபர் சித்திக்கை கடந்த ஜூலை மாதம் பரமக்குடி டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் அங்கு சென்று டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் டிஎஸ்பி கணவர் ஜாபர் சித்திக் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஷோபனா தமிழக டிஜிபி மகேஷ் அகர்வாலிடம் புகார் மனு அளித்தார்.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் சிபிசிஐடி போலீசார் டிஎஸ்பி ஜாபர் சித்திக் மீது எஸ்சி, எஸ்டி பிரிவுகளின் கீழ் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதனால் பரமக்குடி டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ஜாபர் சித்திக்கை சஸ்பெண்ட் செய்து கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவரிடம் வேலூர் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வேலூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜாபர் சித்திக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

அதன்பேரில் நேற்றுமுன்தினம் காலை விசாரணைக்கு ஆஜரான ஜாபர் சித்திக்கிடம் 7 மணி நேரம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். பிறகு விசாரணை முடிவில் ஜாபர் சித்திக்கை இரவு 11 மணியளவில் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது ெசய்து நீதிபதி முன்பு ஆஜரப்படுத்தினர். தொடர்ந்து நேற்று அதிகாலை அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.