Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இந்து சமய அறநிலையத்துறை தனியாக உருவாக்கம் தனி அரசு செயலாளர் நியமனம் சுற்றுலா, பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கிய

வேலூர், செப்.10: சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிைலயங்கள் துறை நிர்வாக ஒருங்கிணைப்பின் கீழ் இயங்கி வந்த இந்து சமய அறநிலையத்துறையை பிரித்து தனித்துறையாக உருவாக்கி அதற்கென தனி செயலாளரையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

1951ல் மெட்ராஸ் இந்து சமய மற்றும் அறக்கட்டளை சட்டம் மூலம் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. இது 1960ம் ஆண்டு முதல் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறக்கட்டளைச் சட்டம் 1959 அமலுக்கு வந்ததன் மூலம் தனி அரசுத்துறையாக முறைப்படி இயங்கத்தொடங்கியது. அதேநேரத்தில் தலைமை செயலக நிர்வாக அளவில், தமிழ்நாடு அரசு கலாச்சாரம், சுற்றுலா மற்றும் சமய அறநிலையங்களை உள்ளடக்கி தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையங்கள் துறை என்ற முதன்மை துறையாக இயங்கி வந்தது.

தலைமைச் செயலகத்தில் ‘இந்து சமய அறநிலையத் துறை’ என்ற புதிய தனித் துறை உருவாக்கப்பட்டு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ‘இந்து சமய அறநிலையத் துறை’ எனும் புதிய தனித் துறை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்து சமய அறநிலைய ஆணையரகம் இனி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட இந்தத் துறையின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது. இதற்கான தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள்(1978) மற்றும் தலைமைச் செயலக வழிமுறைகளில் தேவையான திருத்தங்கள், மனித வள மேலாண்மைத் துறையால் தனியாக வெளியிடப்படும். மேலும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளராக பணியாற்றி வரும் வி.ராஜாராமன், மறு உத்தரவு வரும் வரை புதிய இந்து சமய அறநிலையத் துறையின் செயலாளராக கூடுதல் பொறுப்பை வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.