Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காட்பாடி ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி

வேலூர், ஆக.10: காட்பாடி ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த அடையாளம் தெரியாத வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காட்பாடி ரயில் நிலையம் நுழைவு வாயிலில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அங்கிருந்த தனியார் மருத்துவமனை உதவி மையத்தில் உள்ளவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் இறந்தார். அவர் யார்? காட்பாடி ரயில் நிலையம் ஏன் வந்தார்? என்பது தெரியவில்லை. அவரிடம் இருந்த ஒரு பேப்பரில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி என்ற ஊரின் பெயர் மட்டுமே இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி ரயில்வே போலீஸ் எஸ்எஸ்ஐ பத்மராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.