வேலூர், ஆக.10: வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரே நாளில் மொத்தம் 111 கிலோ கஞ்சா பாக்ெகட்டுகள் கைப்பற்றப்பட்டு 3 ஆசாமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் போன்ற வடமாநிலங்களில் இருந்து அரக்கோணம், சித்தூர், காட்பாடி, வேலூர் வழியாக பெங்களூரு மற்றும் கேரளா செல்லும் விரைவு ரயில்களிலும், பஸ்கள், கார்கள், வேன்கள், லாரிகள் மூலமாகவும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ரயில்களில் கஞ்சாவை கடத்தி வரும் ஆசாமிகள் கஞ்சா பார்சல்களை 2ம் வகுப்பு பொதுப்பெட்டி, முன்பதிவு பெட்டிகளில் சீட்டுகளின் அடியில் வைத்து விட்டு தூரமாக அமர்ந்து ரயிலில் பயணிக்கின்றனர்.
+
Advertisement



