வேலூர், அக்.9: வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் ரஹமத்பாஷா (23) கார் டிரைவர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அனிதா (21) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ேநற்று திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு திருமண கோலத்தில் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
+
Advertisement


