மனைவி பிரிந்து சென்ற நிலையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பு
வேலூர், அக்.9: வேலூர் அருகே மனைவி பிரிந்து சென்ற நிலையில் பெற்ற மகளைேய பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 41 வயது கட்டிட தொழிலாளி. இந்நிலையில், தொழிலாளியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் கட்டிட தொழிலாளி 8ம் வகுப்பு படிக்கும் தனது 13 வயது மகளுடன் வசித்து வந்தார். இதற்கிடையே கட்டிட தொழிலாளி 54 வயதுள்ள வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு மகள் என்றும் பாராமல் 13 வயது மாணவியை தந்தைேய பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, இதுகுறித்து தந்தையுடன் வசித்து வந்த 54 வயது பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அதைக்கேட்டதும் அந்த பெண், இந்த விஷயம் குறித்து நீ வெளியே எதுவும் சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளார். இதற்கிடையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விஷயம் உறவினர் ஒருவருக்கு தெரியவந்தது. உடனே அவர் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை மற்றும் அவரது காதலியை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோனிகா, குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், உடந்தையாக இருந்த அவரது காதலிக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.


