Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வேலூரில் 104.7 டிகிரி வெயில் கொளுத்தியது தொடரும் வெயிலால் பரிதவிக்கும் பொதுமக்கள் திருவண்ணாமலையில் 102.2, ராணிப்பேட்டையில் 100 டிகிரி பதிவு

வேலூர், செப்.9: வேலூரில் 104.7 டிகிரி வெயில் கொளுத்தியது, திருவண்ணாமலையில் 102.2 டிகிரியும், ராணிப்பேட்டையில் 100 டிகிரியாக பதிவானது. தமிழகத்தில் எல்நினோ தாக்குதல் காரணமாக பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் மழை போக்கு காட்டி வருகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையவில்லை. இடையில் அடிக்கடி ஓரிரு நாட்கள் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மற்ற நாட்களில் எல்லாம் தொடர்ந்து 100 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்றும் 104.7 டிகிரி வெயில் கொளுத்தியது. காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் கடும் புழுக்கத்தில் இருந்து வருகின்றனர். மதிய வேளையில் வீசிய அனல் காற்றால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக வேலூர் பழைய பஸ் நிலையம், அண்ணா சாலை மற்றும் கோட்டை சுற்றுச்சாலையில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பானங்களை நாடிச் செல்கின்றனர். இதேபோல் எப்போதும் இல்லாத வகையில் திருவண்ணாமலையிலும் 102.2 டிகிரியும், ராணிப்பேட்டையில் 100 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது. தொடர்ந்து வெயில் 100 டிகிரி தாண்டி கொளுத்தி வருவதால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.