Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நகைகள் திருடிய முத்துவேல் கார்த்தி, பிரபாவதி ஆசிரியை வீட்டில் தங்கம், வெள்ளி திருட்டு போலீசார் விசாரணை வேலூர் அருகே பூட்டை உடைத்து

வேலூர், செப்.9: வேலூர் அருகே ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். வேலூர் அடுத்த அ.கட்டுப்படி கிராமத்தைச் சேர்ந்தவர் லீனாமேரி(46). இவர் சென்னை பெரம்பூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து கடந்த 2024ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். மகள் வெளிநாட்டில் பேங்கில் பணிபுரிந்து வருகிறார். மகன் இன்ஜினியர் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் லீனாமேரி தனது மகனுடன் சென்னை பெரம்பூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அ.கட்டுப்படிக்கு மாதத்திற்கு ஒருமுறை வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டில் வேலை செய்வதற்காக அதேபகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரை பணியில் அமர்த்தி உள்ளார். இந்நிலையில் ஜெயந்தி நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு வீட்டிற்கு மின்விளக்குகள் போட்டுவிட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். தொடர்ந்து நேற்று காலை 5.30 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 2 கிராம் தங்க டாலர் மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சென்னையில் உள்ள லீனாமேரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவர் நேற்று வேலூருக்கு வந்துள்ளார். தொடர்ந்து நேற்று மாலை பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.